அமைச்சர்கள் கருத்து வேறுபாடு

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா தொற்று ஒரு வழியாக குறைந்து வருகிறதே என நினைக்கும் நேரத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை தொற்று வந்துவிட்டது. பல நாடுகள், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை தடை செய்துவிட்டன.நம் அரசும், முதலில் தடை செய்தது. ஆனால், இப்போது தடையை நீக்கிவிட்டது. இந்த விவகாரம், மத்திய அரசின் இரண்டு அமைச்சர்களுக்கிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.'ஐரோப்பிய நாடுகளே,
 டில்லி உஷ், கொரோனா, உருமாறிய கொரோனா, அமைச்சர்கள், ஹர்ஷ்வர்தன், ஹர்தீப் சிங் புரி, தமிழர்கள், விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், நிர்மலா, நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர், பட்ஜெட், மத்திய பட்ஜெட், சூரிநாம், குடியரசு தினம், சிறப்பு விருந்தினர், ராஜபக்சே, சோனியா, சோனியா மருமகன், ராபர்ட் வாத்ரா,

கொரோனா தொற்று ஒரு வழியாக குறைந்து வருகிறதே என நினைக்கும் நேரத்தில், பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை தொற்று வந்துவிட்டது. பல நாடுகள், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை தடை செய்துவிட்டன.

நம் அரசும், முதலில் தடை செய்தது. ஆனால், இப்போது தடையை நீக்கிவிட்டது. இந்த விவகாரம், மத்திய அரசின் இரண்டு அமைச்சர்களுக்கிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.'ஐரோப்பிய நாடுகளே, பிரிட்டன் விமான சேவையை தடை செய்துள்ள நிலையில், நாம் எதற்கு விமானங்களை இயக்க வேண்டும்' என, குமுறுகிறார், மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்.

விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது, கடும் கோபத்தில் உள்ளார் ஹர்ஷ வர்தன். இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.


தமிழர்களுக்கு விருது


பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருது பெற்றவர்களின் பட்டியல், குடியரசு தினத்திற்கு முன் தினம் அறிவிக்கப்படும். இந்த விருதுகள் பெற, பலரும் போட்டி போட்டு, டில்லியில், 'லாபி' செய்வர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

மோடி பிரதமரான பின், இந்த விருதுகள் பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு விட்டன. வெறும் சிபாரிசு மட்டும் வைத்து, ஒருவர் இந்த விருதைப் பெற முடியாது.வரும், 25ம் தேதி அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளில், பல ஆச்சர்யங்கள் இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள். தமிழகத்திலிருந்து பலர், இந்த விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த விருதுகள், இந்த முறை தமிழகத்தில் எட்டு பேருக்கு கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது.

திருச்சிக்கு அருகே உள்ள ஒரு விவசாயி, மண்பாண்டம் செய்பவர், திருநெல்வேலி, தஞ்சாவூரிலிருந்து ஒருவர் என, சராசரி மக்களுக்கு இந்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளதாம். இந்த தமிழக பட்டியலில் பெண்களும் உண்டு.பிரதமரின், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட சிலருக்கும், இந்த விருது கிடைக்க உள்ளதாம். 'மோடிபிரதமரான பின், தமிழகத்திலிருந்து, 60 பேருக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன' என்கின்றனர், பா.ஜ., வினர்.


சூரிநாம் அதிபருக்கு அழைப்பு?குடியரசு தின விழாவின் போது, வெளிநாட்டு தலைவர் ஒருவர் விருந்தினராக டில்லிக்கு வருவார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த ஆண்டின் விருந்தினராக டில்லி வருவதாக இருந்தார்.

ஆனால், பிரிட்டனில் அதிக வீரியம் உடைய கொரோனா வைரஸ் பரவி வருவதால், போரிஸ் ஜான்சன், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இவருக்கு பதிலாக, அண்டை நாட்டிலிருந்து யாரையாவது அழைக்கலாம் என நினைத்தாராம் பிரதமர்.'இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை விருந்தினராக அழைக்கலாம்' என, பிரதமருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

'தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ராஜபக்சே விருந்தினராக வந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது' என, கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார். 'தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர், ராஜபக்சேவுடன் இலங்கையில் விருந்து சாப்பிட்டுவிட்டு, இங்கு வந்து இலங்கை தமிழர்கள் நலன் என நாடகமாடினர். ஆனால், 'தி.மு.க., போல, பா.ஜ., இரட்டை வேடம் போடாது என்பதற்கு, பிரதமரின் இந்த முடிவே சாட்சி' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

இதற்கிடையே, தென் அமெரிக்க நாடான சூரிநாமின் அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரிகாபிரசாத் சந்தோகியை, சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.


தீவிர அரசியலில் சோனியா மருமகன்?காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா மீது, நில மோசடி, லண்டனில் பினாமி பெயரில் சொத்து வாங்கியது என, ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளுக்காக, சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள், ராபர்ட் வாத்ராவிடம் விசாரணை நடத்தினர்.

அரசியல் பழி வாங்கலுக்காக என் மீது வழக்கு போடுகின்றனர். இந்த பிரச்னையை சமாளிக்க வேண்டுமானால், நானும் தீவிர அரசியலில் இறங்குவது தான் ஒரே வழி' என, ராபர்ட் வாத்ரா கூறி வருகிறார். வாத்ரா மீது பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் அரசியலுக்கு வந்தால் காங்கிரசுக்கு ஆபத்து என்கின்றனர், மனைவியும், மாமியாரும். ராகுலோ, இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காக்கிறார்.


கிராமத்திற்கு சாதகமான பட்ஜெட்?அடுத்த மாதம், 1ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும், 400க்கும் மேலான கோப்புகள், 200க்கும் மேற்பட்ட, 'வாட்ஸ் ஆப்' ஆலோசனைகள் என, 'பிசி' யாக உள்ளார் நிர்மலா.

தமிழகத்திற்கும், மத்திய பட்ஜெட்டிற்கும் அதிக சம்பந்தம் உண்டு. இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த- சண்முகம் செட்டியார், ஒரு தமிழர். இதன்பின், சி.சுப்ரமணியன், ஆர். வெங்கட்ராமன், சிதம்பரம் போன்றோர், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களை விட சிறந்த பட்ஜெட்டை, தமிழராகிய, தான் வழங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளாராம் நிர்மலா.
இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் உண்டு. கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சாதகமான பட்ஜெட்டாக இருக்கும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
14-ஜன-202114:30:43 IST Report Abuse
Ellamman மேலே இருக்கும் இடத்திற்க்கு அவ்வளவு ஆசைப்படக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X