பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் -- அரக்கோணம் 'மெமூ' ரயிலை ஆவடி வரை நீட்டிக்க வலியுறுத்தல்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
-சென்னை: சேலம் - அரக்கோணம், 'மெமூ' எக்ஸ்பிரஸ் ரயிலை, ஆவடி வரை நீட்டிக்க வேண்டும்' என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.திருவள்ளூர் மற்றும் ஆவடி ரயில் பயணியர் சார்பில், தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:அரக்கோணம் -- சேலம் இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள், மெமூ எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், இம்மாதம், 6ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில், அரக்கோணத்தில்

-சென்னை: சேலம் - அரக்கோணம், 'மெமூ' எக்ஸ்பிரஸ் ரயிலை, ஆவடி வரை நீட்டிக்க வேண்டும்' என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் மற்றும் ஆவடி ரயில் பயணியர் சார்பில், தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:அரக்கோணம் -- சேலம் இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள், மெமூ எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், இம்மாதம், 6ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில், அரக்கோணத்தில் அதிகாலை, 5:15க்கு புறப்பட்டு, சேலத்துக்கு, 10:50 மணிக்கு சென்றடைகிறது.

சேலத்தில் இருந்து இயக்கப்படும் ரயில், மாலை, 3:30க்கு புறப்பட்டு, இரவு, 9:10 மணிக்கு அரக்கோணம் சென்றடைகிறது. முன்பதிவு செய்வோர் மட்டுமே பயணிக்க முடியும்.இந்த ரயில், கொரோனா ஊரடங்குக்கு முன், பயணியர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது, அரக்கோணம் -- சேலம் இடையே, 'மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட்' என்ற, மெமூ ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.

இதனால், இந்த ரயிலில் பயணியர் போக்குவரத்து குறைவாகவே உள்ளது. பயணியர் வருகை குறைந்தால், ரயில் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும். அந்த நிலைமையை தவிர்க்கவும், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்கவும், இந்த ரயிலை அரக்கோணத்தில் இருந்து, திருவள்ளூர் வழியாக, ஆவடி வரை நீட்டிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X