பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 20ல் பள்ளிகளை திறக்க திட்டம்: முதல்வர் ஒப்புதல் அளித்ததும் அறிவிப்பு

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:பொங்கல் விடுமுறைக்கு பின், வரும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால்,மார்ச் முதல் பள்ளிகள்,கல்லுாரிகள் மூடப்பட்டன; ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்புகள்சில மாதங்களாக, ஊரடங்கு விதிகள் படிப்படியாக
schools, onlineclass, parents, students, பெற்றோர்கள், மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகள், பள்ளிகள், பள்ளிகள் திறப்பு, முதல்வர்

சென்னை:பொங்கல் விடுமுறைக்கு பின், வரும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால்,மார்ச் முதல் பள்ளிகள்,கல்லுாரிகள் மூடப்பட்டன; ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்புகள்சில மாதங்களாக, ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு உள்ளன.கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 2020 டிசம்பர், 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. பாலிடெக்னிக் கல்லுாரிகளும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன.

பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்புகள் நடத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இதனால், பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதற் கட்டமாக நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, ஜனவரி, 6 முதல், 8 வரை, பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.கண்கள் பாதிப்புபெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டியது கட்டாயம் என, தெரிவித்துள்ளனர்.

'ஆன்லைன் வகுப்பில் பாடம் புரிவதில்லை. மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுகின்றன. 'தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆசிரியர்கள் நேரடியாக சந்தேகங்களை போக்கியது போன்ற நிலை இல்லை' என, பெற்றோர் கூறினர்.அதேபோல, தேசிய அளவில், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில், நேரடி வகுப்புகள் நிச்சயம் தேவை என்றும் கூறியுள்ளனர். தனியார் பள்ளிகளும் விதிகளை பின்பற்றி, வகுப்புகளை நடத்த தயாராக உள்ளன.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெற்றோரது கருத்துப்படி, பொங்கல் விடுமுறை முடிந்ததும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ஆசிரியர் தரப்பில் கருத்து

பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் வசிப்பிடங்களுக்கு வர வேண்டும். அதேபோல், பொங்கல் விடுமுறை முடிந்து, 18, 19ம் தேதிகளில், பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதனால், 20ம் தேதி தான் பள்ளிகளை திறக்க முடியும் என, தலைமை ஆசிரியர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளி திறப்பு குறித்த அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், முறைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-ஜன-202113:47:36 IST Report Abuse
Malick Raja சசிகலா அவர்கள் .. சின்னம்மாவாக ..தியாகத்தாயாக .. புரட்சித்தலைவியின் மறுஉருவமாக வடிவெடுத்து வருகிறார் .. நானும் அண்ணன் பன்னீரும் ஒன்றாக சென்று ஒரு சேர ... ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். அப்படின்னு தகவல் கிடைத்தாலும் ஆசார்யப்படுவதற்கில்லை
Rate this:
Cancel
Ela -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202120:21:11 IST Report Abuse
Ela இந்த சமயத்தில் பள்ளிகளை திறப்பது ஆபத்து. கர்நாடகா, ஆந்திராவின் நிலை நம் குழந்தைகளுக்கு வரக்கூடாது. நன்கு ஆராய்ந்து, முடிவு செய்வது நல்லது. உயிருடன் விளையாடாதீர்கள்..
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
11-ஜன-202108:55:23 IST Report Abuse
அன்பு கொரானாவை வைத்து நன்றாக பழனி சம்பாரித்து விட்டார். இ பாஸ், குவாரன்டைன் ஹோட்டல் என்று பலத்த லாபம். இதை தாண்டி, கொரானாவால் பலன் அடைந்து, கொரானாவிற்கே அல்வா கொடுத்த முதன்மையான முதல்வர் ஆகிவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X