காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா மீது, நில மோசடி, லண்டனில் பினாமி பெயரில் சொத்து வாங்கியது என, ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளுக்காக, சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள், ராபர்ட் வாத்ராவிடம் விசாரணை நடத்தினர்.
'அரசியல் பழி வாங்கலுக்காக என் மீது வழக்கு போடுகின்றனர். இந்த பிரச்னையை சமாளிக்க வேண்டுமானால், நானும் தீவிர அரசியலில் இறங்குவது தான் ஒரே வழி' என, ராபர்ட் வாத்ரா கூறி வருகிறார். வாத்ரா மீது பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் அரசியலுக்கு வந்தால் காங்கிரசுக்கு ஆபத்து என்கின்றனர், மனைவியும், மாமியாரும். ராகுலோ, இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE