கோவை:'எவரெஸ்ட்' நிறுவனத்தின் நிறுவனர் சோமசுந்தரத்தின் நுாற்றாண்டு விழா, ரேடிசன் புளூ ஓட்டலில் நடந்தது.இதில், 'அயன் மேன் ஆப் தி கோயமுத்துார்' என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நுால் வெளியிடப்பட்டது.நுாலை, சின்மயா மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யாஜி வெளியிட, கொடிசியா முன்னாள் தலைவர் கந்தசாமி பெற்றுக்கொண்டார்.
தலைமை உரையில் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யாஜி பேசுகையில், ''நமது கல்வி முறையில் உயிர் வாழும் முறை கற்றுத்தரப்படுகிறது. ஆனால், எப்படி உயர்ந்த வாழ்க்கை வாழ்வது என, கற்றுத்தருவதில்லை. அதையும் கற்பிக்க வேண்டும்,'' என்றார்.ராஜூ செட்டியார் சன் ஜூவல்லர்சின் உரிமையாளர் ராஜேஷ் கோவிந்தராஜூலு, பேராசிரியர் ராமச்சந்திரன், கற்பகம் பல்கலை முன்னாள் பதிவாளர் லட்சுமண பெருமாள்சாமி உள்ளிட்டோர் நுால் குறித்து கருத்துரை வழங்கினர். நுாலாசிரியர் மேகலா சேகர் ஏற்புரையாற்றினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE