திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே டாட்டா ஏஸ் வாகனத்தின் சாவியை கேட்டவரை தாக்கிய அண்ணன், தம்பிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன், 48; இவரது மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான டாட்டா ஏஸ் வாகனத்தை, அதே ஊரை சேர்ந்த சேகர் மகன் ரஞ்சித், 25; ஓட்டி வந்து தன்வீட்டில் விட்டார். அவரிடமிருந்து கலியன் சாவியை கேட்டார். ஆத்திரமடைந்த ரஞ்சித் அவரது தம்பி அஜீத், 19; இருவரும் கலியனை தாக்கி, மிரட்டினர்.புகாரின் பேரில் திருக்கோவிலுார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாஸ் மற்றும் போலீசார் ரஞ்சித், சேகர் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE