கோவை:உலகளந்த பெருமாள் கோவிலில், மார்கழி பிரம்மோற்சவ ஆனந்த திருக்கல்யாண வைபவம், பக்தர்கள் சூழ நடைபெற்றது.பீளமேடு காந்திமாநகரில் எழுந்தருளியுள்ள, பழமையான உலகளந்த பெருமாள் கோவிலில், நேற்று திருக்கல்யாணமேடை மற்றும் மண்டப திருவிழா நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு, ஆனந்த திருக்கல்யாண வைபவம் நடந்தது. பெருமாள் மற்றும் தேவியருக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனத்தோடு விழா துவங்கியது.மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை, கோத்ரபிரவரம், கன்னிகாதானம், திருமாங்கல்யதாரணம், வாரணமாயிரம், மங்களஹாரத்தி, வாரணமாயிரம் போன்ற நிகழ்வுகளோடு. விழா நிறைவடைந்தது. நிறைவாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உலகளந்த பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பாகவத கோஷ்டி தீர்த்தபிரசாதம் வினியோகம், அன்னதானம் ஆகியவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அறுசுவைகளுடன் கூடிய சிறப்பு அன்னதானம். கோவில் சார்பில் பரிமாறப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE