கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்துடன் கிராம ஊழியர்கள் சங்கம் இணைவு மாவட்ட கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கண்ணன் மகாலில் நடந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில துணைப் பொது செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி, ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட அமைப்புச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தேவராசன் நன்றி கூறினார்.மாநில தலைவர் முத்தையா, மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில தலைமை நிலைய அலுவலர் அன்பு, மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது காசிம், மாநில செயற்குழு உறுப்பினர் கணபதி, மகளிரணி தலைவர் வள்ளி வாழ்த்துரை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட தலைவர் ஷாஜகான், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசகர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.கூட்டத்தில் வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி மற்றும் அலுவலக உதவியாளர் பதவி உயர்வுக்கு 6 ஆண்டுகள் தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பிரசார செயலாளர் கருப்பன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE