குதுாகலமான திருவிழாபல குடும்பங்களுடன் குதுாகலமாய் நடந்த கோலப்போட்டி, உண்மையில் குட்டித் திருவிழா போல இருந்தது. போட்டியாக இல்லாமல், 'ஒன்றுகூடல்' நிகழ்வை போல மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இனி வரும் நாட்களில் இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகளுக்கும், நிறைய போட்டிகளை 'தினமலர்' நடத்த வேண்டும்.- ஹீனா, குஜன்ஸ் ஆத்ரேயா அபார்ட்மென்ட், வடவள்ளி.
மனஇறுக்கம் குறைந்தது!
கோலத்திற்கு நடுவில், மங்கும் சூரிய ஒளியில், பொங்கிவரும் நீர்வீழ்ச்சி போன்ற காட்சியை படைத்திருந்தேன். இயல்புநிலை திரும்பினாலும், பள்ளிகள் விடுமுறை, ஒர்க் ப்ரம் ஹோம் என வீட்டிற்குள்ளே அடைந்திருப்பதால், ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலையில் இருந்தோம். தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்றது, மனஅழுத்தத்தை குறைத்துவிட்டது.- மஞ்சுளா, குஜன்ஸ் ஆத்ரேயா அபார்ட்மென்ட், வடவள்ளி.மறக்க முடியாத மகிழ்ச்சிஎனக்கு 69 வயதாகிறது. கோலம் போடுவது மிகவும் பிடிக்கும். தினமும் வாசலில் தவறாது கோலம் போட்டு விடுவேன். இதில், தினமலர் கோலப்போட்டியில் பரிசு வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.
வெளியூர்களில் இருக்கும் மகன், மருமகள், பேரன்களுக்கெல்லாம் வென்றவுடன், வாட்ஸ்ஆப்பில் போட்டோவுடன் தெரிவித்து விட்டேன்.- ராணி, ஸ்ரீ தக் ஷா ஆத்ரிக்கா அபார்ட்மென்ட், வடவள்ளி.பலர் பாராட்டினர்பள்ளியில் நடக்கும் ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். கோலம் தெரியாது. இருந்தாலும் முயற்சிக்கலாம் என பங்கேற்றேன். ரோஜா மலரை போட்டு, அதில் பல்வேறு வண்ணங்களை இட்டிருந்தேன். பலர் என் கோலத்தை பாராட்டினர். புது அனுபவமாக இருந்நது. இனி, பண்டிகை நாட்களில் அம்மாவுடன் இணைந்து, நானும் கோலம் போடுவேன். பிரியா சஞ்சு ஸ்ரீ தக் ஷா ஆத்ரிக்கா அபார்ட்மென்ட், வடவள்ளி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE