தமிழ்நாடு

குப்பையில் உரம் தயாரிக்கும் பணி.. தீவிரம்! கடலூர் நகராட்சியில் 57 டன் உற்பத்தி

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் நகராட்சியில் அள்ளப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் உரம் தயாரிக்கும் பணிகள் மூன்று இடங்களில் தீவிரமாக நடக்கிறது. இதுவரை 57 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.கடலுார் நகராட்சியில் 45 வார்டுகளில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் தினசரி 33 டன் குப்பைகள் வரை
குப்பையில் உரம் தயாரிக்கும் பணி.. தீவிரம்! கடலூர் நகராட்சியில் 57 டன் உற்பத்தி

கடலுார் : கடலுார் நகராட்சியில் அள்ளப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் உரம் தயாரிக்கும் பணிகள் மூன்று இடங்களில் தீவிரமாக நடக்கிறது. இதுவரை 57 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடலுார் நகராட்சியில் 45 வார்டுகளில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் தினசரி 33 டன் குப்பைகள் வரை சேகரிக்கப்படுகிறது.அதில், 16.5 டன் மக்கும் குப்பை, 15 டன் மக்கா குப்பை, 1.5 டன் கட்டட இடிபாடுகள் ஆகும்.சுத்தமான நகரை உருவாக்கும் வகையில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்க முடிவு செய்து, கடலுார் நகராட்சி சார்பில், பாபு கலையரங்கம், குண்டுசாலை மற்றும் வசந்தராயன்பாளையம் ஆகிய இடங்களில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினசரி கொண்டு வரப்பட்டு, முதலில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தரம்பிரித்து எடுக்கப்படுகிறது.இதில், மக்கா குப்பைகளில் உள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்கள் அரியலுார் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

மீதம் உள்ள மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, மக்கும் குப்பைகள் இயந்திரம் மூலம் துாளாக்கப்பட்டு, அவற்றை கிடங்களில் உள்ள தொட்டிகளில் 40 நாட்கள் வரை மக்க வைக்கப்படுகிறது.அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க தயிர் 3 லிட்டர், வெல்லம் 5 கிலோ, 90 லிட்டர் தண்ணீரை கலந்து 7 நாட்கள் நொதிக்க வைத்து, இயற்கையான முறையில் திறன்மிகு நுண்ணுயிர் கலவை தயாரித்து, அதனுடன் தவிடு சேர்த்து புட்டு பதத்துடன் உருண்டை பிடித்து, தொட்டிகளில் போடப்படுகிறது.

இதன் மூலம் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. 40 நாட்களுக்கு பின், தொட்டிகளில் மக்க வைத்த குப்பைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி உரம் தயாரிக்கப்படுகிறது.அவற்றை பேக்கிங் செய்து, அருகில் உள்ள விவசாயிகள் மற்றும் தேவைப்படும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை கடலுாரில் உள்ள மூன்று உரக்கிடங்குகளில் இருந்து 57 டன் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X