தி.மு.க., மக்கள் கிராம சபை கணேசன் எம்.எல்.ஏ., பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மக்கள் கிராம சபை கணேசன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

Added : ஜன 11, 2021
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஊராட்சியில் நடந்த தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டத்தில், கணேசன் எம்.எல்.ஏ., பெண்களுக்கு புடவை வழங்கினார்.விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் ராஜலட்சுமி இளையராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட கவுன்சிலர்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஊராட்சியில் நடந்த தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டத்தில், கணேசன் எம்.எல்.ஏ., பெண்களுக்கு புடவை வழங்கினார்.

விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் ராஜலட்சுமி இளையராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா வரவேற்றார்.மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., பங்கேற்று அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம் என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, பொது மக்களுக்கு உணவு மற்றும் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.ஒன்றிய துணை செயலாளர் முத்து, பொறியாளர் அணி செந்தில்நாதன், விவசாய அணி குமார், மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, பேரளையூர் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் முத்து, கிளை செயலாளர்கள் முருகன், சுந்தர், ஞானமணி, அன்பு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X