காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், கொள்ளிடம் கீழணை உபவடி நிலப்பகுதி பாசன விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள், இயக்குனர்கள் கலந்தாய்வு காட்டுமன்னார் கோவிலில் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட வேளாண் வணிகத் துறை உதவி இயக்குனர் பிரேம் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார வேளாண் வணிக உதவி இயக்குனர் திருமுருகன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கீழ் கொள்ளிடம் உபவடி நில பகுதியைச் சேர்ந்த வீரநத்தம், குருங்குடி, குணவாசல், தவர்த்தாம்பட்டு, மாதர்சூடாமணி, மா.உடையூர், நந்தீஸ்வரமங்கலம், கண்ணங்குடி, செல்கல்மேடு, கோவிலாம்பூண்டி கிராம வேளாண் உற்பத்தியாளர்கள், குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காட்டுமன்னார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் ஆறுமுகம், சிதம்பரம் கோட்ட வேளாண்மை வணிகத் துறை அலுவலர் அமுதா, கிராண்தொரண்ட் பாரத் நிறுவனம் தாமோதரன் ஆகியோர் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களின் விதிமுறைகள், நிபந்தனைகள், செயல்பாடுகள், வேளாண்துறை மூலம் வழங்கப்படும் நிதி திட்டங்கள், அரசு திட்டங்கள், திட்ட பயன் முறைகள் குறித்து விளக்கினர்.உதவி அலுவலர்கள் குமராட்சி தேன்பிரியா, புவனகிரி இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர்.கீரப்பாளையம் வேளாண் உதவி அலுவலர் லோகநாதன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE