மின் கம்பத்தை மாற்றணும்பேரூர் பச்சாபாளையம், ரூபி நகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 235) சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- லதா, ரூபி நகர்.
குப்பைக்கு தீ வைப்புஎஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, எம்.ஜி. ரோட்டில், சாலையோரம் அள்ளப்படாமல் குவியும் குப்பை, தீ வைத்து எரிக்கப்படுவதால், இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.- தங்கராஜ், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி.
தார் சாலை அமைக்கணும்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, அரிமளம் காலனியில், தார் சாலை வசதி இல்லாததால், மழை காலங்களில், இங்குள்ள மண் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.- சுகந்தி, அரிமளம் காலனி.
வாகன ஓட்டிகள் அவதிவடவள்ளியில் இருந்து, கஸ்துாரி நாயக்கன்பாளையம் செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- லட்சுமணன், வடவள்ளி.
சாலையை சீரமைக்கணும்பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி, கே.பி.எம்., பள்ளிக்கு எதிரே, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி, பணி முடிந்ததும் முறையாக மூடப்படவில்லை. சாலையும் அமைக்கப்படவில்லை. மக்கள் அவதிப்படுகின்றனர்.- ஜெயா, பாரதி நகர்.
ரோடு மோசம்மாநகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, அம்மன் கோவில் பஸ் ஸ்டாப் - பூம்புகார் நகர் செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக படு மோசமாக உள்ளது.- ஜெய்கணேசன், பூம்புகார் நகர்.
நாய் தொல்லை அதிகம்நகர் மற்றும் புறநகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. மக்கள் மிகுந்த அச்சத்துடன் அதிகாலையில் வாக்கிங் செல்கின்றனர். நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவின், இருகூர்.
குப்பை தொட்டி வேண்டும்கணபதி, வேதாம்பாள் நகரில், குப்பை தொட்டி இல்லாததால், சாலையோரம் குப்பை குவிக்கப்படுகிறது. குப்பையுடன், தொழிற்சாலை கழிவும் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- அண்ணாமலை, வேதாம்பாள் நகர்.
விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, கன்னிமார் நகரில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.-ஆதவன், பாரதி நகர்.
இ.எஸ்.ஐ., அருகே சுகாதார சீர்கேடுசிங்காநல்லுார், காமராஜர் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அருகில் உள்ள, ஜீவா நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- பிரதீப், சிங்காநல்லுார்.
சுகாதார சீர்கேடுஅம்மன் குளம், ராஜிவ் காந்தி நகரில் உள்ள, ஹவுசிங் யூனிட்டில், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சித்ரா, ராஜிவ் காந்தி நகர்.
தொடர் விபத்து; வாகன ஓட்டிகள் அலறல்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, உழவர் சந்தை அருகில், கரூர் வைஸ்யா வங்கி முன்புறம், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாக னங்களை இயக்க முடியாமல், திணறுகின்றனர். அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையை தரமானதாக புதுப்பிக்க வேண்டும்.- தினேஷ், அஷ்டலட்சுமி நகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE