பெண்ணாடம் : பெண்ணாடத்தில் செந்தமிழ் மரபு வழி வேளாண் மையம், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ஆகியன சார்பில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். பாடலாசிரியர் சிலம்புசெல்வி, செந்தமிழ் வேளாண் மைய நிர்வாகி முருகன், முன்னோடி இயற்கை விவசாயிகள் செல்வம், ஸ்டாலின், பசுமை துாண்கள் அமைப்பு நிர்வாகி அறிவு, கோட்டேரி சிவக்குமார், எறுமனூர் கோவிந்தராஜ், முருகன்குடி வெங்கடேசன், ராமநத்தம் கோவிந்தசாமி, ஓலையூர் ஆனந்தராசு, மணிமாறன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாடலாசிரியர் அறிவுமதி பங்கேற்று, நம்மாழ்வார் உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க மரபு வழி முறையில் விவசாயம் செய்வது குறித்தும்; இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.மைய பொறுப்பாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE