பண்ருட்டி : கெடிலம் ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,36; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை திருவதிகை அணைக்கட்டியில் கெடிலம் ஆற்றை கடந்தார். அப்போது அவர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.தகவலறிந்த பொது மக்கள் அவரை தேடினர்; நேற்று சாத்திப்பட்டு ஊராட்சி எல்லை அருகில் பன்னீர்செல்வத்தின் உடல் கரை ஒதுங்கியது.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE