சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு வேறு சம்பவங்களில் இரு பெயின்டர்கள் பலி

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கோவை:வெவ்வேறு சம்பவங்களில், இரு பெயின்டர்கள் பலியாயினர்.கோவை இடையர்பாளையம் வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் முரளிதரன், 36. பெயின்டர். பீளமேடு சிட்ராவில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பீளமேடு பூங்கா நகரில், உள்ள கட்டடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்த பின் குப்பைக்கு பெயின்ட் அடிக்க பயன்படுத்தும், தின்னரை ஊற்றி தீ வைத்தார். அப்போது தின்னர் முரளிதரன்

கோவை:வெவ்வேறு சம்பவங்களில், இரு பெயின்டர்கள் பலியாயினர்.கோவை இடையர்பாளையம் வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் முரளிதரன், 36. பெயின்டர். பீளமேடு சிட்ராவில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பீளமேடு பூங்கா நகரில், உள்ள கட்டடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்த பின் குப்பைக்கு பெயின்ட் அடிக்க பயன்படுத்தும், தின்னரை ஊற்றி தீ வைத்தார்.
அப்போது தின்னர் முரளிதரன் மீதும் பட்டு தீப்பற்றியது.தீ உடல் முழுவதும் பரவியது. அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.* கோவை சாய்பாபா காலனி கே.கே.புதுாரை சேர்ந்தவர் பைஜூ, 35. பெயின்டர். நேற்று முன்தினம் அவர் அதே பகுதியில் உள்ள கட்டடத்தில், பெயின்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X