சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி மர்ம மரணம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கோவை புலியகுளம் தாமு நகரை சேர்ந்தவர் அழகிரிசாமி, 59. மாநகராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்வதுடன், ஐ.என்.எஸ்., அக்ரானியில், ஷூ தைக்கும் தொழிலும் மேற்கொண்டு வந்தார். கடந்த, 8ம் தேதி ஷூ தைக்க ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பிரகாசம் அங்கு சென்று பார்த்தபோது, காவலாளி அறையில் அழகர்சாமி உயிரிழந்து கிடந்தது கண்டார். பிரகாசம் அளித்த புகாரின்

கோவை புலியகுளம் தாமு நகரை சேர்ந்தவர் அழகிரிசாமி, 59. மாநகராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்வதுடன், ஐ.என்.எஸ்., அக்ரானியில், ஷூ தைக்கும் தொழிலும் மேற்கொண்டு வந்தார்.
கடந்த, 8ம் தேதி ஷூ தைக்க ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பிரகாசம் அங்கு சென்று பார்த்தபோது, காவலாளி அறையில் அழகர்சாமி உயிரிழந்து கிடந்தது கண்டார். பிரகாசம் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் தவறாக பேசியவருக்கு சிறைகோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த, 29 வயது இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த புலியகுளம் வெரிவாடா செட்டியார் லே-அவுட்டை சேர்ந்த அரவிந்தன், 22 குடிக்க தண்ணீர் கேட்டார். தொடர்ந்து பெண்ணிடம் தவறாக பேசினார். இளம்பெண் மற்றும் அவரது தங்கை ஆகியோர், அரவிந்தனின் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டதற்கு, அரவிந்தன், இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில், அரவிந்தனை கைது செய்த ராமநாதபுரம் போலீசார், சிறையில் அடைத்தனர்.
பைக் திருடிய மர்மநபருக்கு வலைகோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் சுமிர்சிங், 34. நேற்று முன்தினம் ரத்தினம் வீதியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் இருந்த கடைக்கு சென்றார். திரும்பி வந்த போது, அவரது பைக் மாயமாகியிருந்தது. அவரது புகாரின்படி, வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புகையிலை, மது விற்றவர்கள் கைதுகோவையில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய சோதனையில், கடைகளில் மறைத்து விற்பனை செய்யப்பட்ட, 267 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனை செய்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கோவையின் பல்வேறு பகுதிகளிலும், டாஸ்மாக் மதுக்கடை அருகே இரவு 10:00 மணிக்கு மேல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்றதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X