இந்தியா

காங்., போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்? தி.மு.க., திடீர் விளக்கம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கவர்னருக்கு எதிரான காங்., போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன் தி.மு.க., விளக்கம் அளித்துள்ளது.தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா விடுத்துள்ள அறிக்கை:கவர்னருக்கு எதிரான காங்., கட்சியின் போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்காததால், கவர்னரை ஆதரிப்பதாக அர்த்தம் அல்ல. கவர்னர் நியமித்ததில் இருந்து, அரசின் அனைத்து நடவடிக்கையும் முடக்கும் வகையில் செயல்பட்டு

புதுச்சேரி : கவர்னருக்கு எதிரான காங்., போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்காதது ஏன் தி.மு.க., விளக்கம் அளித்துள்ளது.

தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா விடுத்துள்ள அறிக்கை:கவர்னருக்கு எதிரான காங்., கட்சியின் போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்காததால், கவர்னரை ஆதரிப்பதாக அர்த்தம் அல்ல. கவர்னர் நியமித்ததில் இருந்து, அரசின் அனைத்து நடவடிக்கையும் முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதை காங்., அரசு சரியான வழியில் தட்டிக் கேட்கவில்லை என மன வருத்தம் தி.மு.க.,வுக்கு அதிகம்.அரசு அமைந்தவுடன், நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமிக்க அரசு தவறிவிட்டது.

மத்திய பா.ஜ., அரசு தனது கட்சியினர் மூவரை எம்.எல்.ஏ.,வாக நியமித்தது. அதனை ஏற்க மறுத்து அரசு, அப்போதே, ஆட்சியை கலைத்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை.கவர்னரின் செயல்பாடுகளுக்கு மவுனமாக இருந்த காங்., அரசு, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள திடீரென வீறுகொண்டு எழுந்து கவர்னர் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தை மேற்கொண்டது.

கவர்னருக்கு எதிரான போராட்டம் என்பதால், தி.மு.க., வும் பங்கேற்றது. கவர்னர் அழைத்து பேசியதையே வெற்றியாக கருதி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.அதன் பின்னரும் கவர்னர் தொடர்ந்து ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டார். அப்போது எதிர்ப்பு தெரிவிக்காத காங்., தற்போது மீண்டும் கவர்னருக்கு எதிரான போராட்டத்தை துவக்கியுள்ளது.

இதனால், ஏற்கனவே பல முறை புதைக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் உயிர் பெறுமா? கவர்னருக்கும், இந்த அரசுக்கும் இருக்கும் பதவிக்காலம் மிக குறைவு. போராட்டத்தின் மூலம் கவர்னர் மாற்றப்பட்டாலும், மீதமுள்ள ஆட்சி காலத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிட முடியுமா? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாததால் தான் காங்., நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X