புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 30பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், இரண்டு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
புதுச்சேரியில் நேற்று 3,050பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் -22 பேர், காரைக்காலில் ஒருவர், மாகியில் 7 பேர் என மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 38,455 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 156பேரும், வீடுகளில் 160 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 76 வயது முதியவர், காரைக்கால் திருநள்ளாரை சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனா தொற்றினால் அரசு மருத்துவமனையில் இறந்தனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆகும்.நேற்று 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37,501ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,16,036 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 4,73,048 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE