அரசியல் செய்தி

தமிழ்நாடு

600 பானைகளில் பொங்கலிட்ட பெண்கள்: பா.ஜ., சார்பில் கோலாகலம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், கணியாம்பூண்டி மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல் துவக்கிவைத்தார்.காலையில், கோமாதா பூஜை நடத்தப்பட்டு, புதுப்பானையில், பொங்கலிடப்பட்டது. அப்பகுதி பெண்கள் பங்கேற்று, 600 பானைகளில், பொங்கல் வைத்தனர்.அம்மனுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். ஆண்கள்,
 600 பானைகளில் பொங்கலிட்ட பெண்கள்: பா.ஜ., சார்பில் கோலாகலம்

திருப்பூர்:பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், கணியாம்பூண்டி மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல் துவக்கிவைத்தார்.காலையில், கோமாதா பூஜை நடத்தப்பட்டு, புதுப்பானையில், பொங்கலிடப்பட்டது. அப்பகுதி பெண்கள் பங்கேற்று, 600 பானைகளில், பொங்கல் வைத்தனர்.
அம்மனுக்கு படையலிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். ஆண்கள், பெண்களுக்கு, விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, மதுவந்தி, பரிசு வழங்கி, பேசினார்.திருப்பூர் மேற்கு ரோட்டரி, கனரா வங்கி, போஸ்ட் ஆபீஸ் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. மாவட்ட அறிவுசார் பிரிவு தலைவர் செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கதிர்வேல், சீனிவாசன், தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X