திருப்பி அனுப்புங்க: சீனா கெஞ்சல்

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீன வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்ததை அடுத்து அவரை திருப்பி அனுப்பும்படி சீனா கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய - சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவ தரப்பில் பல சுற்று பேச்சு நடந்தும் பதற்றம் குறைய வில்லை. எல்லையில் இரு நாடுகளும்
 திருப்பி அனுப்புங்க, சீனா கெஞ்சல்

புதுடில்லி: இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீன வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்ததை அடுத்து அவரை திருப்பி அனுப்பும்படி சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய - சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இரு நாட்டு ராணுவ தரப்பில் பல சுற்று பேச்சு நடந்தும் பதற்றம் குறைய வில்லை. எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளன. இந்நிலையில் கிழக்கு லடாக்கின் சுசூல் பகுதியில் உள்ள குருங் மலைப்பகுதி வழியாக அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரரை
இந்திய ராணுவத்தினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சீன ராணுவம் தன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது:எல்லையில் கடும் இருள் சூழ்ந்திருந்ததால் சீன வீரர் வழி தவறி இந்திய பகுதிக்குள் சென்றிருக்கலாம் என
சந்தேகிக்கிறோம்.அதனால் அவரை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய ராணுவம் அளித்தபதிலில் 'இந்திய எல்லையில் சீன வீரரை பிடித்து வைத்துள்ளோம். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தபின் அவர் சீனாவுக்கு திருப்பி
அனுப்பப்படுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் தட்றான் தட்றான் தட்டிகிட்டே இருக்கான் எங்க முதுகிலயா ஆமா இந்த மாலை எந்தக் கடைல வாங்குனது என்ற டணால் தங்கவேலு Vs M சரோஜா காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel
Sundar -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202122:12:57 IST Report Abuse
Sundar இது போல ஒரு செய்தி சீன ஊடகத்தில் இல்லவே இல்லை
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
15-ஜன-202116:34:47 IST Report Abuse
madhavan rajanஅதாவது நம்ம நாட்டுல சில தேசப்பற்றுள்ளவர்கள் பாகிஸ்தான் மற்றும் சீனா சொல்வதைத்தான் நம்பவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். நமது நாட்டு ராணுவம், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் யாரையும் அவர்கள் நம்பமாட்டார்கள். அவர்களுக்கு உடம்புக்கு வந்தால்கூட விமானம் பிடித்து அமேரிக்கா, பிரிட்டன் என்று ஓடுவார்கள். என்னே அவர்கள் தேசப்பற்று. வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
11-ஜன-202119:57:31 IST Report Abuse
mathimandhiri உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X