'சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு உதவும் கழுகுகள் அழிவுக்கு காரணம் என்ன' என்பது குறித்து, திண்டுக்கல் கால்நடை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது:
இந்தியாவில் 9 வகை கழுகு இனங்கள் உள்ளன. கழுகுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முட்டை இடும். இதனால் கழுகின் இனப்பெருக்கம் அரிதானது.சில ஆண்டுகளாக கழுகின் பல இனங்கள் அழிந்து வரும் காரணத்தை வல்லுநர்கள் ஆராய்ந்தனர். முதலில் உணவு
பற்றாக்குறை தான் காரணம் என்று அறியப்பட்டது. பின் கழுகுகளின் சிறுநீரகம் பழுதடைந்து யூரிக் அமிலம் படிந்தது தெரிந்தது. பூச்சிக் கொல்லிகளோ, உலோகங்களோ காரணமல்ல என தெரிய வந்தது. கால்நடை மருத்துவத்தில் வலி நிவாரணியாக பயன்படும் 'டைக்ளோ பினாக்' என்ற மருந்தே மேற்கண்ட விளைவுகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இம்மருந்தால் சிகிச்சை பெற்று இறந்த கால்நடைகளை உண்ணும் கழுகுகள் சிறுநீரகம்
பாதிக்கப்பட்டு அழிவது தெரிந்தது. இதையடுத்துஅம்மருந்துதடை செய்யப்பட்டது. கழுகுகளின் அழிவை தடுக்க, மாற்று மருந்தாக கால்நடைகளுக்கு மெலாக்சிம் மருந்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் கழுகுகளை பாதுகாக்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE