பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் வசிக்க 1 லட்சம் வீடு! பின்னலாடை ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:''இடம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்காக, திருப்பூரில், அடுத்த ஐந்தாண்டுகளில், ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும். இதற் கான திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக் கப்பட வேண்டும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய அரசுக்கு, விரிவான

திருப்பூர்:''இடம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்காக, திருப்பூரில், அடுத்த ஐந்தாண்டுகளில், ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும். இதற் கான திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக் கப்பட வேண்டும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய அரசுக்கு, விரிவான கோரிக்கை மனு அனுப்பிவைத்துள்ளது.
மத்திய பட்ஜெட், வரும் பிப்., 1ல் தாக்கலாகிறது. பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு, பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், அனுப்பியுள்ள மனு:நாட்டின் பொருளாதார மேம்பாட்டிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும், பின்னலாடை துறையின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இத்துறையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. கடந்த 2019 - 20ம் நிதியாண்டில், திருப்பூரின் பின் னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 27 ஆயிரத்து 280 கோடியை எட்டியுள்ளது.தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநில தொழிலாளர்கள், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இடம்பெயர்ந்த தொழிலாளர் வசதிக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும். இதற்கான சிறப்பு அறிவிப்புகள், பட்ஜெட்டில் வெளியிடப்பட வேண்டும். தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக, ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கும் தொகையை, செலவினமாக கருதி, வருமானவரி விலக்கு அளிக்கவேண்டும்.பின்னலாடை துறைக்கு தனி வாரியம், ஆய்வுக்கூடங்கள் அமைக்க வேண்டும். கொரோனா கால பாதிப்புகளிலிருந்து, நிறுவனங்கள் மீண்டு வருவதற்காக, அவசர கால கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பெறப்பட்ட கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு மட்டுமே, புதிய கடன் வழங்கப்படுகிறது.60 நாட்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் உள்ள (எஸ்.எம்.ஏ.,-1) நிறுவனங்கள் மற்றும் 90 நாட்கள் வரை கடனை செலுத்தாத, (எஸ்.எம்.ஏ., -2) நிறுவனங்களுக்கும், புதிய கடன் வழங்கவேண்டும்.
இதன்மூலம், ஏராளமான நிறுவனங்கள், மறுமலர்ச்சி பெறும்.ஏற்றுமதியாளர்கள், வர்த்தக மேம்பாட்டுக்காக, வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிகள், வர்த்தகர் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்கின்றனர். சந்தை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு, கவுன்சில்கள் மூலம் மட்டுமே மானியங்கள் வழங்கப்படுகிறது.குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் பயன்பெற ஏதுவாக, ஏற்றுமதி சார்ந்த சங்கங்கள் மூலமாகவும், வர்த்தக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கான, ஆர்.ஓ.டி.டி.இ.பி., என்கிற புதிய திட்டம், கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில், எந்தெந்த வகை ஆடைக்கு, எத்தனை சதவீ தம் சலுகை என்கிற விளக்க அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X