ஆடை விற்பனை; களைகட்டியது காதர்பேட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடை விற்பனை; களைகட்டியது காதர்பேட்டை

Added : ஜன 11, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் காதர்பேட்டையில் மொத்தம் மற்றும் சில்லரை ஆடை வர்த்தக கடைகள், 700க்கும் மேல் உள்ளன.பொங்கலுக்காக, திருப்பூர் நிறுவனங்கள் மட்டுமின்றி, பெங்களூரு போன்ற வெளியூர்களிலிருந்தும், அதிகளவில் ஆடை ரகங்களை, இப்பகுதி வர்த்தகர்கள், தருவித்துள்ளனர். நஞ்சப்பா பள்ளி ரோட்டிலும், தற்காலிக கடைகள் முளைத்துள்ளன.பொங்கல் நெருங்கியுள்ளதால், நேற்று, காதர்பேட்டை பகுதி
 ஆடை விற்பனை; களைகட்டியது காதர்பேட்டை

திருப்பூர்:திருப்பூர் காதர்பேட்டையில் மொத்தம் மற்றும் சில்லரை ஆடை வர்த்தக கடைகள், 700க்கும் மேல் உள்ளன.பொங்கலுக்காக, திருப்பூர் நிறுவனங்கள் மட்டுமின்றி, பெங்களூரு போன்ற வெளியூர்களிலிருந்தும், அதிகளவில் ஆடை ரகங்களை, இப்பகுதி வர்த்தகர்கள், தருவித்துள்ளனர். நஞ்சப்பா பள்ளி ரோட்டிலும், தற்காலிக கடைகள் முளைத்துள்ளன.பொங்கல் நெருங்கியுள்ளதால், நேற்று, காதர்பேட்டை பகுதி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுடிதார், நைட்டி, சேலை ரகங்கள்; குழந்தை ஆடைகள்; ஜீன்ஸ், சர்ட், வேட்டி, லுங்கி, பனியன் ஜட்டி என உள்ளாடை ரகங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X