பல்லடம்:பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், பசுமை விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.மரம் வளர்த்தல், மழை நீர் சேமிப்பு, இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட சமூக பணிகளை நோக்கமாக கொண்டு பல்லடம் வனம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இப்பணியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.75 லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த விழிப்புணர்வு வாகனத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் இலவசமாக வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கு 'வனம்' அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன், செயல் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'வனம் அமைப்பின் கொள்கைகள், திட்ட பணிகள், பசுமையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து டிஜிட்டல் திரை மூலம் வீடியோவாக வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என, செயலாளர் சுந்தரராஜ் தெரிவித்தார். இயக்குனர்கள் அனந்த கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE