பல்லடம்:பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி மகா விஷ்ணு நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.அருகிலுள்ள மற்றொரு ஊராட்சிக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. மாணிக்காபுரம் ஊராட்சி ஊழியர்கள் குழாய் இணைப்புக்காக குழி தோண்டும் போது மகாவிஷ்ணு நகர் பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.பொதுமக்கள் கூறுகையில், 'மகாவிஷ்ணு நகரில் இருந்து, இதே ஊராட்சியில் உள்ள மின் நகர் பகுதிக்கு குடிநீர் வழங்க குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு வருவதாக, ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அருகிலுள்ள ஊராட்சி பகுதிக்கு, குடிநீர் எடுத்து செல்வதற்காகவே குழி தோண்டப்பட்டது.மகாலட்சுமி நகரில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மின் நகர் பகுதிக்கு குடிநீர் வேண்டுமென்றால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அதை தவிர்த்து, இங்கிருந்து குடிநீர் எடுத்து செல்வதாக ஊராட்சி நிர்வாகத்தினர் சப்பை கட்டு கட்டுகின்றனர்' என்றனர்.பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, ஊராட்சி பணியாளர்கள், குழி தோண்டும் பணியை பாதியில் நிறுத்தி சென்றனர். இச்சம்பவத்தால் மகாவிஷ்ணு நகர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE