சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

திராட்சை, முந்திரியிலும் அதிகாரிகள் அடித்த கமிஷன்!

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
''புரோக்கர் இல்லாத இடமே இல்லையா பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''என்ன வே புலம்புதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற, திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வர்றாங்க... கார் நிறுத்தம் இடத்துல இருக்கிற, 'டோல்கேட்'டில் புரோக்கர் கூட்டம் நிற்குது பா...''காரில் வரும் பக்தர்களை மடக்கி, 'நீங்க
டீ கடை பெஞ்ச்

''புரோக்கர் இல்லாத இடமே இல்லையா பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''என்ன வே புலம்புதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற, திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வர்றாங்க... கார் நிறுத்தம் இடத்துல இருக்கிற, 'டோல்கேட்'டில் புரோக்கர் கூட்டம் நிற்குது பா...

''காரில் வரும் பக்தர்களை மடக்கி, 'நீங்க நேரடியா போனா தரிசனம் கிடைக்க, பல மணி நேரம் ஆகும்... கால் மணி நேரத்துல, சிறப்பு தரிசனம் வழியாக, உங்களை மூலவர்கிட்ட அழைச்சு போய், தரிசனம் செய்ய வைக்கிறோமுன்னு' சொல்லி, அவங்களை கூட்டிட்டு போறாங்க பா...

''கால் மணி நேரத்துல தரிசனம் முடிஞ்சதும், 2,000 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்றாங்களாம்.. அந்த பணத்துல கோவில் அதிகாரி, போலீஸ் என, பலருக்கும் மாமூல் போகுதாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''கமிஷனர் அலுவலகத்துல, ரவுடிகளுக்கு ராஜ உபசாரம் நடந்துருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''என்னங்க சொல்லுறீங்க...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்ட ரவுடி பட்டியலில், 144 பேர் இருக்கா... அவாளை எல்லாம், 7ம் தேதி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துல ஆஜர்படுத்த, உயரதிகாரி உத்தரவிட்டுருக்கார் ஓய்...''ஆனா, 57 ரவுடிகள் தான் வந்தாளாம்... அவாளுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து, போலீசாரே ராஜ உபசாரம் செஞ்சிருக்கா... அப்புறம் அவா எல்லாம், 'இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டோம்' என, உறுதிமொழி எடுத்துருக்கா ஓய்...

''ஆனால், பிரபல ரவுடிகள் யாரும், போலீசார் அழைப்பை மதிக்கலையாம்... ஆளுங்கட்சிக்கு மாறிய ரவுடிகளை, போலீசார் அழைக்கவே இல்லையாம் ஓய்...

''சேலத்துல போலீசாருக்கு மரியாதையே இல்லையான்னு, சிலர் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''திராட்சை, முந்திரியில கூட அதிகாரிகள் கமிஷன் அடிச்சிருக்காவ வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ரேஷன் கடையில, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, துணிப்பை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்துக்கிட்டு இருக்காவ வே...

''அதுல முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை, ஒவ்வொரு கூட்டுறவு மொத்த பண்டக சாலையும், 'டெண்டர்' வழியா, வியாபாரியிடம் இருந்து வாங்கி, ரேஷன் கடைகளுக்கு, 'சப்ளை' பண்ணுறாவ வே...

''பண்டக சாலையை நிர்வாகம் செய்யுற கூட்டுறவு இணை பதிவாளர்கள் சில பேரு, இந்த கொள்முதலில், கமிஷன் அடிச்சிருக்காவ வே...

''இது எங்கே போய் முடியுதுன்னா... அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்ததால, வியாபாரிகள் தரமற்ற ஏலக்காய், முந்திரி, திராட்சையை சப்ளை செஞ்சிருக்காவ வே...

''இந்த விபரத்தை, கூட்டுறவு சங்க ஊழியர்கள், முதல்வருக்கு புகாரா அனுப்பியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
11-ஜன-202121:50:19 IST Report Abuse
Anantharaman Srinivasan அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்ததால, வியாபாரிகள் தரமற்ற ஏலக்காய், முந்திரி, திராட்சையை சப்ளை செஞ்சிருக்காவ வே...''இந்த விபரத்தை, கூட்டுறவு சங்க ஊழியர்கள், முதல்வருக்கு புகாரா அனுப்பியிருக்கிறார்கள். அரசன் பெரிய பெரிய கமிஷன். அதிகாரிகள் குட்டி குட்டி. அரசன் பற்றிய புகாரை கவர்னருக்கு பாமாக திமுக கொடுத்துள்ளதே. மொத்ததில் எல்லாபுகாரும் மறந்து / மறைந்து போகும்..
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
11-ஜன-202119:29:55 IST Report Abuse
Tamil திராட்சை கொடுத்துவிட்டு முந்திரியை அமுக்கிவிட்டார்கள் இதுதான் உண்மை நிலைமை எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்று தமிழகம் அனைத்திலும் பேச்சு. அல்ப தனமாக சிலகாரியங்கள் செய்து அசிங்கப்படவேண்டுமா
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
11-ஜன-202110:11:11 IST Report Abuse
R.RAMACHANDRAN குடியரசுத் தலைவர்,பிரதமர்,முதல்வர் ஆகியோருக்கு புகார் அனுப்பினால் அவை அனைத்தும் குற்றவாளிகளுக்கே அனுப்பும் செயலில் முதலைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X