தர்மபுரியில், மக்கள் நீதி மையம் கட்சியின் பிரசாரம் சமீபத்தில் நடந்தது.அக்கட்சியின் தலைவர் கமல் பேசுகையில்,'இரட்டை இலையில் அமர்ந்துள்ள இருவர் அடித்துக் கொண்டு, நாற்காலியை உடைக்கத் தான் போகின்றனர். சில கூட்டணி உடையும்; சில கூட்டணிகள் மாறும். அவ்வாறு உடையும் போது சொல்கிறேன், எங்கள் கூட்டணி யாருடன் என்பதை' என்றார்.
அருகிலிருந்த டீக்கடையில், டீ குடித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், 'அண்ணன் எப்போ காலியாவர்; திண்ணை எப்போது கிடைக்கும் என்பது போல, எந்த கூட்டணி உடையுமுன்னு இந்த நடிகர் காத்திருக்கிறார் போல...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE