பொது செய்தி

தமிழ்நாடு

புள்ளிகளால் விவேகானந்தர் ஓவியம்:கல்லூரி மாணவியர் புதுமை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லுாரி மாணவியர் நான்குபேர் இணைந்து, புதுமையான நுட்பத்தில், விவேகானந்தர் உருவத்தை தீட்டியுள்ளனர்.முதலாம் ஆண்டு மாணவியரான யாமினி, தர்ஷினி, அமிர்தா ஸ்ரீ, காவியா ஆகியோர், கடந்த 6ம் தேதி, புள்ளிகளால், விவேகானந்தர் ஓவியம் வரையும் முயற்சியை துவக்கினர்; ஐந்து நாட்களுக்குப்பின், நேற்று மாலை நிறைவு
 புள்ளிகளால் விவேகானந்தர் ஓவியம்:கல்லூரி மாணவியர் புதுமை

திருப்பூர்:சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லுாரி மாணவியர் நான்குபேர் இணைந்து, புதுமையான நுட்பத்தில், விவேகானந்தர் உருவத்தை தீட்டியுள்ளனர்.முதலாம் ஆண்டு மாணவியரான யாமினி, தர்ஷினி, அமிர்தா ஸ்ரீ, காவியா ஆகியோர், கடந்த 6ம் தேதி, புள்ளிகளால், விவேகானந்தர் ஓவியம் வரையும் முயற்சியை துவக்கினர்; ஐந்து நாட்களுக்குப்பின், நேற்று மாலை நிறைவு செய்தனர். 400 சதுர அடி பரப்பு கொண்ட மெகாசைஸ் காகிதத்தில், நெருக்கமாக, வண்ண புள்ளிகளை வைத்து, விவேகானந்தர் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர்.கல்லுாரி முதன்மை டிசைனர் பூபதி விஜய் கூறியதாவது:ஒவ்வொரு மனிதனுக்கும், சுவாமி விவேகானந்தர் போன்ற பொறுமையும், விவேகமும் அவசியம். இந்த கருத்தை, அவரது பிறந்தநாளில், அனைவருக்கும் உணர்த்தும் வகையிலேயே, நிப்ட்-டீ மாணவியர், 'பாய்ன்டிஸம்' என்கிற, புள்ளி ஓவியத்தை வரைந்துள்ளனர்.ஓவியத்தை உருவாக்க, பொறுமை, விவேகம், நேர மேலாண்மை மிகவும் அவசியமாகிறது; இதையெல்லாம் முறையாக கடைபிடித்ததாலேயே, மாணவியரால் இந்த ஓவியத்தை சிறப்பாக உருவாக்க முடிந்துள்ளது.பென்சில் முனை அளவு முதல் வெவ்வேறு அளவுகளில், லட்சக்கணக்கான புள்ளிகளை கொண்டு, விவேகானந்தர் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, தொடர்ந்து மூன்றுநாட்கள், இந்த ஓவியம், கல்லுாரி முன்பகுதியில், பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஓவியம் உருவாக்குவதற்கான செலவினங்களை, ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X