திருப்பூர்:திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ.,) உள்ளது. இங்கு எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் நேரடியாக இணைந்து பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வயர்மேன், டிராட்ஸ்மேன் சிவில், எம்ராய்டரி, தையல் தொழில் நுட்ப உள்ளிட்ட பயிற்சி பெற முடியும்.அத்துடன் அரசு வழங்கும் லேப்-டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய் பெற முடியும். பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.ஏற்கனவே விண்ணப்பித்து இணைந்தவர்களுக்கு இரண்டு கட்டமாக கவுன்சலிங் நடந்துள்ளது. வரும், 16ம் தேதி இணைய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகவல்களுக்கு 94990 55696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE