பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு எவ்வளவு கூடுதல் ஆசிரியர் தேவை! விவரம் சேகரிப்பு

Added : ஜன 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஊரடங்கால் பள்ளி திறப்பு இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. முந்தைய ஆண்டுகளை விட, இக்கல்வியாண்டு அதிகளவில் மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளதால், அதற்கேற்ப பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு ஜூன் முதல்

திருப்பூர்:ஊரடங்கால் பள்ளி திறப்பு இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. முந்தைய ஆண்டுகளை விட, இக்கல்வியாண்டு அதிகளவில் மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளதால், அதற்கேற்ப பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு ஜூன் முதல் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் இணைந்த மாணவர் எத்தனை பேர், தற்போதைய நிலையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை ஏற்ப எவ்வளவு கூடுதல் ஆசிரியர் தேவைப்படுவர் என்பது குறித்து விபரம் சேகரிக்க மாவட்ட கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கலுக்கு பின் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் நியமனத்துக்கு விபரம் சேகரிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X