மழையால் காபி பறிப்பதில் சிக்கல்: விவசாயிகளுக்கு நஷ்ட அபாயம்| Dinamalar

மழையால் காபி பறிப்பதில் சிக்கல்: விவசாயிகளுக்கு நஷ்ட அபாயம்

Added : ஜன 11, 2021
Share
கூடலுார்:கூடலுாரில் தொடரும் மழையால், காபி பறித்து உலர வைக்க முடியாததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பாண்டு, டிச., மாதத்தில், அரபிகா காபி அறுவடை முடிந்தது. தற்போது, 'ரோபஸ்டா காபி' அறுவடை நடந்து வருகிறது. தற்போது, காய்ந்த காபி கொட்டைக்கு, 70 ரூபாய்
 மழையால் காபி பறிப்பதில் சிக்கல்:  விவசாயிகளுக்கு நஷ்ட அபாயம்

கூடலுார்:கூடலுாரில் தொடரும் மழையால், காபி பறித்து உலர வைக்க முடியாததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பாண்டு, டிச., மாதத்தில், அரபிகா காபி அறுவடை முடிந்தது. தற்போது, 'ரோபஸ்டா காபி' அறுவடை நடந்து வருகிறது. தற்போது, காய்ந்த காபி கொட்டைக்கு, 70 ரூபாய் வரையும்: தோல் நீக்கப்பட்ட காபி விதைக்கு, 145 ரூபாய் வரைக்கும் விலை கிடைத்து வருகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மந்தமான காலநிலை நிலவுவதுடன், இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், காபி பழங்களை பறித்து உலர வைக்க முடியாத சூழல் உள்ளது. மழை தொடர்ந்தால், அழுகி விடும் அபாயம் ஏற்படும்.விவசாயிகள் கூறுகையில்,'காபிக்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், மழையினால் அதனை பறிக்க முடியாமல், நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.காபி வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'எதிர்பாராத மழையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பின் தான், காபி பழங்களை பறித்து உலர வைக்க முடியும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X