குன்னுார்:குன்னுாரில், நடப்பாண்டின் துவக்கத்தில் நடந்த முதல் தேயிலை ஏலத்தில், 22.73 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில், இந்த ஆண்டின் முதல் ஏலம் நடந்தது. இலை ரகத்தில், 13.03 லட்சம் கிலோ வந்ததில், 12.44 லட்சம் விற்பனையானது; 95.45 சதவீதம் விற்றதில், சராசரி விலை கிலோவுக்கு, 133.46 ரூபாய் விலை இருந்தது. 'டஸ்ட்' ரகத்தில், 5.46 லட்சம் கிலோ வந்ததில், 4.36 லட்சம் கிலோ விற்றது; 79.88 சதவீதம் விற்றதில், சராசரி விலை 140.26 ரூபாய் விலை இருந்தது.மொத்தம், 18.50 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 16.80 லட்சம் கிலோ விற்றது; 22.73 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கிலோவுக்கு சராசரி விலை, 20.86 ரூபாய் வரை உயர்ந்தது. விற்பனையும் அதிகரித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE