கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தில், வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில், பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு, 30 ரூபாய் வரை விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது, 18 ரூபாய் விலை கிடைக்கிறது. தோட்ட பராமரிப்பு மற்றும் தொழிலாளர்களின் கூலிக்கு கூட, இந்த விலை போதுமானதாக இல்லை. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு மேலாக, மாவட்டத்தில், மழை பெய்து வருவதுடன், வானம் மேகமூட்டமான காலநிலை நிலவுகிறது.சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே, பசுந்தேயிலை செழித்து வளரும் நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், தேயிலை தோட்டங்களில், கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால், ஏற்கனவே விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கொப்புள நோயால், மகசூல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE