ஜன., 11, 1966
உத்தர பிரதேசம், முகல்சராய் என்ற ஊரில், 1904 அக்., 2ல் பிறந்தவர், லால் பகதுார் சாஸ்திரி. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றார்.
சுதந்திரத்திற்கு பின், உ.பி., காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்று, பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். காங்கிரஸ் பொதுச்செயலராகவும் பதவி வகித்தார். 1951ல், ரயில்வே மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அரியலுார் ரயில் விபத்திற்கு தார்மிக பொறுப்பேற்று, பதவி விலகினார்.
உள்துறை அமைச்சராக இருந்த போது, ஊழல் தடுப்பு குழு அமைவதற்கு காரணமாக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, 1964ல் மரணமடைந்தார். இதையடுத்து, நம் நாட்டின் இரண்டாவது பிரதமராக, லால் பகதுார் சாஸ்திரி பொறுப்பேற்றார். 1966 ஜன., 11ல், சோவியத் ஒன்றியத்திலுள்ள, தாஷ்கண்ட் நகரில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது, தன், 61வது வயதில் உயிரிழந்தார்.முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE