கிணத்துக்கடவு:வடபுதுார் ஊராட்சிக்குட்பட்ட மணிகண்டபுரத்தில் சமுதாய நலக்கூட கட்டடம் உள்ளது. கிராம மக்கள், இங்கிருந்து மூன்று கி.மீ., துாரம் செல்ல வேண்டியிருந்தது. இச்சிரமத்தை குறைக்க வடபுதுாரில் சமுதாய நலக்கூட கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சிக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதன்படி, மத்திய அரசு நிதியில் இருந்து, 70 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூட கட்டடம் கட்டும் பணிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. இப்பணிகள், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இருந்து செய்யப்படவதால், நிதி வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால், கடந்த ஒரு ஆண்டாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'மூன்று மாதத்திற்குள் கட்டடம் கட்டும் பணி முடிக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE