பொது செய்தி

தமிழ்நாடு

பெரியம்மை சிகிச்சையில் உலவும் போலிகள்! கண்டிப்பு காட்டுமா கால்நடைத்துறை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:வட்டார அளவில் மருத்துவ குழுக்களை அமைத்து, பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் கேரளா எல்லையை ஒட்டிய பகுதியில், விவசாயிகள் பால் உற்பத்திக்காக நாட்டினம் மற்றும் கலப்பின மாடுகளை அதிகளவில் வளர்க்கின்றனர்.வளர்ப்பு மாடுகள், கடந்த இரண்டு மாதங்களாக,

பொள்ளாச்சி:வட்டார அளவில் மருத்துவ குழுக்களை அமைத்து, பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் கேரளா எல்லையை ஒட்டிய பகுதியில், விவசாயிகள் பால் உற்பத்திக்காக நாட்டினம் மற்றும் கலப்பின மாடுகளை அதிகளவில் வளர்க்கின்றனர்.வளர்ப்பு மாடுகள், கடந்த இரண்டு மாதங்களாக, பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, இச்சூழலில், பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில், கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனால், நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து, பதற்றம் அடைந்துள்ளனர். தற்போதைய சூழலில், கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையை பயன்படுத்தி, போதிய அனுபவம், தகுதி இல்லாத போலி மருத்துவர்கள் விவசாயிகளை சந்தித்து சிகிச்சை அளிப்பதாக கூறி, கூடுதலாக பணத்தை வசூலித்து, தரமில்லாத மருந்துகளை செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கால்நடைத்துறையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல், ஆடுகளுக்கு செலுத்தப்படும் பெரியம்மை நோய் தடுப்பூசிகளை பசுக்களுக்கும் செலுத்தி, சிகிச்சை அளிப்பதாகவும் புகார் உள்ளது. இதை தடுக்க, ஒன்றிய அளவில், மருத்துவ குழுக்கள் அமைத்து, பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X