குடியரசு தின விழா: சூரிநாம் அதிபருக்கு அழைப்பு?

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: குடியரசு தின விழாவின் போது, வெளிநாட்டு தலைவர் ஒருவர் விருந்தினராக டில்லிக்கு வருவார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த ஆண்டின் விருந்தினராக டில்லி வருவதாக இருந்தார்.ஆனால், பிரிட்டனில் அதிக வீரியம் உடைய கொரோனா வைரஸ் பரவி வருவதால், போரிஸ் ஜான்சன், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இவருக்கு பதிலாக, அண்டை நாட்டிலிருந்து யாரையாவது அழைக்கலாம் என

புதுடில்லி: குடியரசு தின விழாவின் போது, வெளிநாட்டு தலைவர் ஒருவர் விருந்தினராக டில்லிக்கு வருவார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த ஆண்டின் விருந்தினராக டில்லி வருவதாக இருந்தார்.



latest tamil news




ஆனால், பிரிட்டனில் அதிக வீரியம் உடைய கொரோனா வைரஸ் பரவி வருவதால், போரிஸ் ஜான்சன், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இவருக்கு பதிலாக, அண்டை நாட்டிலிருந்து யாரையாவது அழைக்கலாம் என நினைத்தாராம் பிரதமர்.'இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை விருந்தினராக அழைக்கலாம்' என, பிரதமருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

'தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ராஜபக்சே விருந்தினராக வந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது' என, கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார். 'தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர், ராஜபக்சேவுடன் இலங்கையில் விருந்து சாப்பிட்டுவிட்டு, இங்கு வந்து இலங்கை தமிழர்கள் நலன் என நாடகமாடினர்.


latest tamil news




ஆனால், 'தி.மு.க., போல, பா.ஜ., இரட்டை வேடம் போடாது என்பதற்கு, பிரதமரின் இந்த முடிவே சாட்சி' என்கின்றனர், பா.ஜ.,வினர். இதற்கிடையே, தென் அமெரிக்க நாடான சூரிநாமின் அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரிகாபிரசாத் சந்தோகியை, சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-ஜன-202112:45:53 IST Report Abuse
sankaseshan உலக சூழ்நிலை அறியாதவர்கள் ,குதர்க்கமாக கருத்து பதிவிடும் முகுந்தன் ,நாகன் வெகுளி எல்லாம் ரொம்ப அறிவாளிகள் என்று நினைப்பு .
Rate this:
Cancel
Dr.P.Manivannan - Karur,இந்தியா
11-ஜன-202111:01:25 IST Report Abuse
Dr.P.Manivannan தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ராஜபக்சே விருந்தினராக வந்தால், பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது' என, கட்சியின் மூத்த பிஜேபி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-202110:36:01 IST Report Abuse
SAPERE AUDE இவ்வருடம் குடியரசுதின அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக தென் அமேரிக்க நாடான சுரீநாம் நாட்டின் குடியரசின் தலைவர் ஜனாதிபதி சந்திரக பிரசாத் சந்தோகி அவர்களை அழைத்திருப்பது வரவேற்கத்தக்க ஓர் முயர்ச்சி. இவர் பதவி ஏற்கும் போது வேதங்களை வைத்து சம்ஸ்கிருத த்தில் பதவி பிரமாணம் செய்தார். சுரிநாமில் இருபத்தைந்து சதவீதமக்கள் இந்திய வம்சாவளியினர் என்து குறிப்பிடத்தக்கது. இவர்கள் சென்னையை அடுத்துள்ள "புலிகாட்" என்ற பழமாநேரியிலிருந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனியிரால் இந்தியாவிலிருந்து அனுபப்பட்ட கொத்தடிமைகளின் வம்சாவளியனர் ஆவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X