உடுமலை:உடுமலையில் தேவாரப்பாடல்களை, மாணவர்களுக்கு கற்பித்து, பாராயணம் செய்து ஆன்மிக சிந்தனையை மேம்படுத்தி வருகிறார் ஆசிரியர் ஜெயசிங்லிங்கவாசகம்.உடுமலையில், ஈரோடு தொண்டர்சீர் பரவுவார் குருகுலம் செயல்படுகிறது. பரமகுரு சம்பந்த சரணாலய அடிகள் வழிகாட்டுதல்படி, இந்த குருகுலம் செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில், உலக நன்மையை நோக்கமாகக்கொண்டு, மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட சைவ சமய பாசுரங்களை, கற்பிக்கத்துவங்கினார் ஆரூர் அடிகள் என பெயர் பெற்ற ஜெயசிங்லிங்கவாசகம்.ஆசிரியர் பணி ஓய்வுபெற்ற பின்னரும், ஆன்மிகத்தில் உள்ள ஈடுபாடு, வளரும் இளம் தலைமுறையினரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், தொடர்ந்து பயிற்சி அளிக்கிறார்.இவரின் மாணவியாக பயிற்சி பெற்ற உமாநந்தினி, மார்ச் மாதம் துவங்கி, தற்போது வரை, எட்டாயிரம் தேவாரப்பாடல்கள் பாடி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீன பேராசிரியராக, 10 ஆண்டுகளாக ஆன்மிகப்பணி செய்து வருகிறார். திருமுறைச் நெறிச்செல்வர், ஆன்மிக அரசு, ஞானமணி, ஆன்மிக ரத்னா, தமிழ்கடல், கவியரசு, இலக்கியச்செல்வர், நேஷனல் பில்டர் விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.பேராசிரியர் ஜெய்சிங்லிங்கவாசகம் கூறுகையில், ''ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முறையாகவும், ஈடுபாட்டுடனும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. துவக்கத்தில் குறைந்த மாணவர்கள் தான் இந்த வகுப்பில் சேர்ந்தனர். தற்போது, உடுமலை பகுதியில் மட்டுமே 50க்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புக்கு வருகின்றனர். மேலும், வேறு பகுதிகளில் உள்ளவர்களின் வசதிக்காக, யுடியூப் சேனல் துவங்கியும், அதிலும் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE