வால்பாறை:'தொழிலாளர்கள் தேவைக்காக எஸ்டேட் பகுதிகளுக்கு, இரவு நேர பஸ் இயக்க வேண்டும்,' என மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை மா.கம்யூ., கட்சி தாலுகா பொதுசெயலாளர் பரமசிவன், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், வால்பாறையில் குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனவிலங்குகளின் மத்தியில் வாழும் தொழிலாளர்களுக்கு அன்றாடம் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.கடந்த சில மாதங்களாக வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில், எஸ்டேட் பகுதிகளுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வால்பாறையிலிருந்து எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரத்தில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் தனியார் வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே வால்பாறை நகரில் அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் வழக்கம் போல் இரவு நேர பஸ்கள் இயக்க வேண்டும். குறிப்பாக ேஷக்கல்முடி, ரயான், வில்லோனி, மானாம்பள்ளி பவர்ஹவுஸ் உள்ளிட்ட எஸ்டேட்களுக்கு இரவு நேர பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE