ஆனைமலை:டாப்சிலிப் பழங்குடியின மக்களுக்கு, ஆனைமலை போலீசார் சமையல் பொருட்கள், கம்பளி உள்பட பலவித பொருட்கள் வழங்கி உதவினர்.பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிகமுத்தி செட்டில்மென்ட்டில், 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம், போலீஸ் ஐ.ஜி., பெரியய்யா, எஸ்.பி., அருளரசு, டி.எஸ்.பி., விவேகானந்தன் ஆகியோர் தலைமையில், பழங்குடியினருக்கு பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.குளிரை தாக்குப்பிடிக்க கம்பளி, சிறுவர்களுக்கு ஆடைகள், புத்தகங்கள், சமையல் பொருட்கள் வழங்கினர். ஆனைமலை போலீசார் சார்பில் மொத்தம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE