பொது செய்தி

தமிழ்நாடு

சாலைத்தடுப்பு உயிரிழப்பை தடுக்கும் குடிநீர் திட்ட அதிகாரிகளே கவனிங்க!

Added : ஜன 11, 2021
Share
Advertisement
அன்னுார்;குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் இடத்தில், தடுப்பு அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருப்பூருக்கு, 1,080 கோடி ரூபாயில், நான்காம் குடிநீர் திட்டத்திற்கு, ரோட்டோரத்தில் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதில் அவிநாசி ரோட்டில், கஞ்சப்பள்ளி பிரிவில், குழி தோண்டிய பிறகு மண்ணை அழுத்திச் சமன்படுத்தாமல் விட்டிருந்தனர்.
 சாலைத்தடுப்பு உயிரிழப்பை தடுக்கும் குடிநீர் திட்ட அதிகாரிகளே கவனிங்க!

அன்னுார்;குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் இடத்தில், தடுப்பு அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருப்பூருக்கு, 1,080 கோடி ரூபாயில், நான்காம் குடிநீர் திட்டத்திற்கு, ரோட்டோரத்தில் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதில் அவிநாசி ரோட்டில், கஞ்சப்பள்ளி பிரிவில், குழி தோண்டிய பிறகு மண்ணை அழுத்திச் சமன்படுத்தாமல் விட்டிருந்தனர். குழியை ஒட்டி தடுப்பும் வைக்கவில்லை.இதனால், இரண்டு நாட்களுக்கு முன் லாரி அந்த குழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயம் அடைந்தார். நாகமாபுதுார் மக்கள் கூறுகையில், 'ஆறு அடி அகலத்திற்கு, எட்டு அடி ஆழத்திற்கு, குழி தோண்டுகின்றனர். ரோட்டில் பாதி அளவுக்கு மண் குவித்து வைப்பதுடன், குழாய்களையும் வைத்து விடுகின்றனர்.'ஆனால், குழி தோண்டும் இடத்தில், குழியை ஒட்டி, தடுப்புகள் வைக்கப்படுவதில்லை. குறுக்கே, கயிறு கட்டப்படுவதில்லை. இரு வாரங்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இளைஞர் சோமனுார் பிரிவில் பைக் விபத்தில் இறந்தார். மேலும், மூன்று விபத்துகள் நடந்துள்ளன' என்றனர்.'குடிநீர் வடிகால் வாரியம், குழாய் பதிக்கும் இடங்களில், தடுப்பு அமைத்து, கயிறு கட்டி, பாதுகாப்பான முறையில் பணி செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X