பொது செய்தி

தமிழ்நாடு

சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 11, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்;சின்னவேடம்பட்டி ஏரியில் 150வது வார களப்பணியை முன்னிட்டு, பொங்கல் விழா நேற்று நடந்தது.கோவை வடக்கு பகுதியில் முக்கியமான நீர் ஆதாரமாக சின்னவேடம்பட்டி ஏரி உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களால், 150 வாரமாக களப் பணி செய்யப்பட்டு வருகிறது. 150வது வாரத்தை முன்னிட்டு, நேற்று சின்ன

கோவில்பாளையம்;சின்னவேடம்பட்டி ஏரியில் 150வது வார களப்பணியை முன்னிட்டு, பொங்கல் விழா நேற்று நடந்தது.கோவை வடக்கு பகுதியில் முக்கியமான நீர் ஆதாரமாக சின்னவேடம்பட்டி ஏரி உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களால், 150 வாரமாக களப் பணி செய்யப்பட்டு வருகிறது. 150வது வாரத்தை முன்னிட்டு, நேற்று சின்ன வேடம்பட்டி ஏரியின், மேற்குப்புறம், உயிர்வேலி பகுதியில், குளத்து மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்தது. தன்னார்வலர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.விழாவில் தன்னார்வலர்கள் கூறுகையில், 'சின்னவேடம்பட்டி ஏரியில் எட்டு கிலோ மீட்டர் துார ராஜவாய்க்கால் சீரமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக, ஏரியின் எல்லையில் பல்லுயிர் பாதுகாப்புக்காக உயிர் வேலி அமைக்கும் பணி நடக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளான கணுவாய், மாங்கரை, ஆனைக்கட்டியில் மழை நீர் ஓடைகள் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.ஏரியில், ஆறரை ஏக்கரில் பட்டாம் பூச்சிகள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஏற்படும் வகையில், பல வகை நாட்டு மரங்கள், மூலிகை செடிகள் என 2500 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பறவைகளின் தேவைக்காக, நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேனீக்கள் இனப்பெருக்கம் செய்ய தேனீ வளர்ப்பு முன்னெடுக்கப்படுகிறது.இத்துடன் அவிநாசி அத்திக்கடவு திட்டம் இரண்டில், சின்னவேடம்பட்டி ஏரியை சேர்க்க, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்' என்றனர்.பொங்கல் வழிபாட்டை அடுத்து 150வது வாரமாக மரக் கன்று பராமரிப்பு பணிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X