கிராமத்திற்கு சாதகமான பட்ஜெட்?| Dinamalar

கிராமத்திற்கு சாதகமான பட்ஜெட்?

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (25)
Share
புதுடில்லி: அடுத்த மாதம், 1ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.தினமும், 400க்கும் மேலான கோப்புகள், 200க்கும் மேற்பட்ட, 'வாட்ஸ் ஆப்' ஆலோசனைகள் என, 'பிசி' யாக உள்ளார் நிர்மலா. தமிழகத்திற்கும், மத்திய பட்ஜெட்டிற்கும் அதிக சம்பந்தம் உண்டு.இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த-

புதுடில்லி: அடுத்த மாதம், 1ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.



latest tamil news


தினமும், 400க்கும் மேலான கோப்புகள், 200க்கும் மேற்பட்ட, 'வாட்ஸ் ஆப்' ஆலோசனைகள் என, 'பிசி' யாக உள்ளார் நிர்மலா. தமிழகத்திற்கும், மத்திய பட்ஜெட்டிற்கும் அதிக சம்பந்தம் உண்டு.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த- சண்முகம் செட்டியார், ஒரு தமிழர். இதன்பின், சி.சுப்ரமணியன், ஆர். வெங்கட்ராமன், சிதம்பரம் போன்றோர், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களை விட சிறந்த பட்ஜெட்டை, தமிழராகிய, தான் வழங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளாராம் நிர்மலா.


latest tamil news


இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் உண்டு. கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சாதகமான பட்ஜெட்டாக இருக்கும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X