கோவை:''அகண்ட கனவுகளுடன், சரியான திட்டங்களுடன் தோள் கொடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மையம் இருக்கும்,'' என, கோவை தொழில் துறையினரிடம் கமல் பேசினார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், தொழில் துறையினர் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி, கோவை தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.அப்போது அவர் பேசியதாவது:பன்முக தன்மை கொண்ட கோவையில் தொழில் துறையினர், எழுத்தாளர், கலைஞர்கள், ஓவியர்கள் என பலரையும் எனக்கு நன்கு தெரியும். மாற்றத்திற்கான மனநிலை தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு விதை துாவ இங்கு வந்திருக்கிறேன். அகண்ட கனவுகளுடன் மக்கள் நீதி மையம், சரியான திட்டத்துடன் தோள் கொடுக்கும்.கோவைக்கு 'ரிங்' ரோடு வேண்டும். மெட்ரோ ரயிலும் புதிதாக வர வேண்டும். விமான நிலைய விரிவாக்கம் வந்தால் கோவைக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். கோவைக்கான தேவை இதுவரை பூர்த்தியாகவில்லை.இளைஞர்கள் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு இது. இல்லையேல், இரு தலைமுறை வீணாகிவிடும். வேலையில்லா திண்டாட்டத்தை நீக்கி, முதலாளிகளாக மாற்ற முடியும் திட்டங்கள் இங்கு இருக்கின்றன.'நான் ஹிந்தி எதிர்ப்பாளன் அல்ல; தமிழ் காவலன்' என்று சொல்ல ஆள் வேண்டும். அப்போதுதான், எல்லோரும் சரிசமமாக நம்மிடம் பேசுவார்கள். அரசியலில் இளைஞர்கள் பங்கு இருந்தே ஆக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஏமாற்றம் தவிர்க்கஒரே வழி மாற்றம்கமல்ஹாசன் நேற்று இரவு, மாதம்பட்டியில் பேசுகையில், ''எனக்கு மாதம்பட்டியில் நண்பர்கள் இருக்கிறார்கள். மாதம்பட்டி மக்கள் ஒருவர் மீது அன்பு வைத்தால் அது மாறாது. அப்படிப்பட்ட அன்பு நிறைந்த மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அந்த ஏமாற்றத்தை தவிர்க்க ஒரே வழி மாற்றம் தான். அதை நோக்கி மக்கள் நகர வேண்டும். பெண்கள், இளைஞர்கள் நினைத்தால், மாற்றத்தை கொண்டுவர முடியும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE