கோவை:கல்லுாரி மாணவர்களுக்கு விலையில்லா 'டேட்டா கார்டு' வழங்க உத்தரவிட்ட, அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும், 9 லட்சத்து 69 ஆயிரத்து, 47 மாணவர்களுக்கு ஜன., 2021 முதல் ஏப்., 2021 வரை நான்கு மாதங்கள் நாள் ஒன்றுக்கு, 2 ஜி.பி., 'டேட்டா' பெற்றிட, 'எல்காட்' நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.நுாலக வாசகர் வட்ட தலைவர் மற்றும் தனியார் கல்லுாரி பேராசிரியர் லெனின்பாரதி கூறுகையில், 'தமிழக அரசின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. இணைய வழி வகுப்புகள் மூலமாக, மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க உதவும். தமிழக அரசின் இந்த முடிவு இணையவழி கற்றல் முறை தடையின்றி தொடர வழிவகை செய்யும். தனியார் சுயநிதி கல்லுாரி ஆசிரியர்கள் சொற்ப ஊதியத்தில், பத்து மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் இந்த விலையில்லா டேட்டா சேவையை வழங்க தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE