பொது செய்தி

தமிழ்நாடு

50 ஆண்டாக எழுதும் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு சாதனை விருது

Added : ஜன 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எழுதி வரும் ஒரே எழுத்தாளர் என, அங்கீகாரத்து, கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாருக்கு 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை விருது வழங்கி கவுரவித்து உள்ளது.'கிரைம் நாவல் மன்னன்' என அழைக்கப்படுபவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். 1969ம் ஆண்டு எழுத துவங்கிய இவர், இன்று வரை, 51 ஆண்டுகளை
 50 ஆண்டாக எழுதும் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு சாதனை விருது

கோவை:இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எழுதி வரும் ஒரே எழுத்தாளர் என, அங்கீகாரத்து, கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாருக்கு 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை விருது வழங்கி கவுரவித்து உள்ளது.'கிரைம் நாவல் மன்னன்' என அழைக்கப்படுபவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். 1969ம் ஆண்டு எழுத துவங்கிய இவர், இன்று வரை, 51 ஆண்டுகளை கடந்தும் நாவல், சிறுகதை, தொடர்கதைகள் என, தொடர்ந்து எழுதி வருகிறார். 40க்கும் மேற்பட்ட, வார, மாத இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.இதுவரை, 1,500 நாவல்கள், 2,000 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 900 நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்தியாவில் எந்த மொழி எழுத்தாளரும் இத்தனை நாவல்கள், சிறுகதைகள் எழுதியதில்லை. ராஜேஷ்குமாரின் எழுத்து சாதனையை அங்கீகரித்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறுகையில், ''நான், 1969ல் கல்லுாரியில் படிக்கும்போதே கதைகள் எழுத துவங்கி விட்டேன். என் அம்மா, 'என் மகன் பெரிய எழுத்தாளராக வருவான்' என, கூறுவார். மாதா, பிதா, குரு இந்த மூன்று பேரும் கொடுத்த நம்பிக்கை தான், நான் எழுத்தாளர் ஆக காரணம். இந்த சாதனையை, என் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
11-ஜன-202111:50:52 IST Report Abuse
JeevaKiran உங்களுடைய தீவிர ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நின் புகழ் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X