பொது செய்தி

தமிழ்நாடு

ஜப்பான் தேயிலை சந்தை முறை

Added : ஜன 11, 2021
Share
Advertisement
ஊட்டி:ஜப்பானில் நடக்கும் தேயிலை சந்தை முறையை, நீலகிரி மாவட்டத்தில், விரைவில் அறிமுகப்படுத்த, தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, பாலகொலா மகாலிங்கா சிறு தேயிலை விவசாயிகள் சங்கத்தின் வருடாந்திர மகாசபை கூட்டம் நடந்தது. இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி பங்கேற்று பேசுகையில்,''தேயிலை விவசாயிகளுக்கு குறைந்த பட்ச விலை கிடைக்க

ஊட்டி:ஜப்பானில் நடக்கும் தேயிலை சந்தை முறையை, நீலகிரி மாவட்டத்தில், விரைவில் அறிமுகப்படுத்த, தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, பாலகொலா மகாலிங்கா சிறு தேயிலை விவசாயிகள் சங்கத்தின் வருடாந்திர மகாசபை கூட்டம் நடந்தது. இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி பங்கேற்று பேசுகையில்,''தேயிலை விவசாயிகளுக்கு குறைந்த பட்ச விலை கிடைக்க தேயிலை வாரியம் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறு விவசாயிகள் தரமான தேயிலையை வழங்கி, வாரியத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஜப்பானில் நடக்கும் தேயிலை சந்தை முறையை, பிப்., முதல், நீலகிரியில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதியமுறை சிறு தேயிலை விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்,'' என்றார்.சிறுவிவசாயிகள் கூறுகையில், 'ஏல சந்தையில், தேயிலை துாள் கிலோவுக்கு குறைந்தபட்சம், 150 ரூபாய் குறையாமல் விலை நிர்ணயிக்க வேண்டும். சிறு விவசாயிகளுக்கு, பசுந்தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம், 30 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர்.இந்திய தேயிலை வாரியத்தின் துணை தலைவர் குமரன், நீலகிரி 'நெலிகோலு' சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிண்டிகேட் 'செக்'ஜப்பான் சந்தை முறையின் படி, தேயிலைத் துாள் வாங்க வரும் வியாபாரிகள், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் தான், ஏலம் கோர முடியும். இதன் மூலம், ஏலத்தில் பங்கேற்கும் வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து விலையை குறைக்கும் முயற்சி தடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை நன்றாக இருக்கும் பட்சத்தில், தென் மாநிலங்கள் அளவில் சில இடங்களில் இந்த முறையை கொண்டு வர தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X