பெ.நா.பாளையம்:''தமிழக மக்கள், ஓட்டு எனும் வேல் கொண்டு, தீய சக்திகள் பதவிக்கு வராமல் தடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய பொது செயலாளர் ரவி பேசினார்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி அருகே, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், 'நம்மூரு பொங்கல்' விழா நடந்தது. பா.ஜ., தேசிய பொது செயலாளர் ரவி விழாவை துவக்கி வைத்து பேசுகையில்,''பொங்கல் விழாவையொட்டி, தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரும் என, எதிர்பார்க்கிறேன். பெண்களையும், நமது கலாசாரத்தையும் இழிவுபடுத்தும் நபர்களை, இந்த தேர்தலில் மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். முருக பெருமான் தன்னுடைய கையில் உள்ள வேல் கொண்டு தாரகாசுரனை அழித்தார். அதே போல, தமிழக மக்கள், ஓட்டு எனும் வேல் கொண்டு, தீய சக்திகள் பதவிக்கு வராமல் தடுக்க வேண்டும்,'' என்றார்.தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில், கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 1,508 பெண்கள் பொங்கல் வைத்தனர். விழாவையொட்டி, பல்வேறு விளையாட்டுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE