சோமனூர்;வரலாறு காணாத வகையில் நுால் விலை ஏற்றமடைந்து வருகிறது. இதனால், மில் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஸ்பின்னிங் மில்கள் இயங்குகின்றன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் நுால் ரகங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இயல்பாக இருந்த நுால் விலை, கடந்த ஒரு மாதமாக ஏறுமுகத்தில் உள்ளது. இதனால், மில் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதத்தில், இருந்த விலையை விட, 30 முதல், 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.மில் உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதமாக, நுால் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. மலேசியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிடைத்த ஆர்டர்களின் பேரில் நுால் ரகங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதனால், நுால் ரகங்களின் தேவையும் அதிகரித்து, விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வட மாநிலங்களில் குளிர், இங்கு பொங்கல் பண்டிகை துவக்கம் உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி குறையும் வாய்ப்பு உள்ளது. இதே விலை உயர்வு இருக்குமா அல்லது விலை இறங்குமா என்பது பொங்கலுக்கு பிறகு தெரியவரும்' என்றனர்.நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, துணி ரகங்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர், துணி உற்பத்தியை குறைத்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE